No Lanjam · தமிழ்நாடு இலஞ்சக் கணக்கீடு
அரசு அலுவலர்கள் தங்கள் வேலையைச் செய்வதற்கே உங்களிடம் பணம் கேட்கிறார்களா? அவர் உங்களிடம் மட்டும் கேட்கவில்லை!
தமிழ்நாட்டில் லஞ்ச அனுபவங்களைப் பெயரின்றிப் பதிவு செய்யுங்கள்; RTI, அரசு சேவை நடைமுறைகள், குடிமக்கள் உரிமைகள் பற்றிய எளிய தமிழ் வழிகாட்டிகளைப் படியுங்கள். இது ஒரு சுயாதீன குடிமக்கள் முயற்சி; அரசு இணையதளம் அல்ல.
உங்கள் அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள்
வழிகாட்டிகள்
- தகவல் அறியும் உரிமை (RTI) – RTI விண்ணப்பம் எழுதுவது, கட்டணம், முதல் மேல்முறையீடு — எளிய தமிழில்.
- லஞ்சம் – புகார் மற்றும் வழிகாட்டி – லஞ்சம் கேட்டால் என்ன செய்வது, எங்கே புகார் செய்வது, சட்டம் என்ன சொல்கிறது.
- ஊழலை வெளிப்படுத்துவோர் (Whistleblower) – பாதுகாப்பாகத் தகவல் தெரிவிப்பது, ஆதாரங்களைப் பாதுகாப்பது, பொறுப்புடன் பேசுவது.
- அரசு சேவைகள் – பட்டா போன்ற சேவைகளின் வழக்கமான நடைமுறை, ஆவணங்கள், தாமதம் அல்லது லஞ்சம் கேட்டால் செய்யக்கூடியவை.
எப்படிப் பதிவு செய்வது?
- எங்கே? லஞ்சம் கேட்கப்பட்ட/கொடுத்த அரசு அலுவலகத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் அல்லது நகரம் விபரம். உங்களது பெயர், வீட்டு முகவரி குறிப்பிடுவது அவசியம் இல்லை.
- எந்தச் சேவை? அரசுத் துறை விபரம், நீங்கள் கோரிய சேவை என்பதும் — பட்டா, சான்றிதழ், இணைப்பு, புகார் மனு, பாஸ்போர்ட் வெறிபிகேஷன் போன்ற எதுவானாலும்.
- எவ்வளவு? எவ்வளவு கேட்டார்கள், நீங்கள் கொடுத்தீர்களா அல்லது மறுத்தீர்களா. இரண்டுமே முக்கியம்.
- பதியுங்கள் TNBC-2026-A8K4P2 போன்ற ஒரு எண் கிடைக்கும். இது ஒரு ஒப்புகை எண், எதிர்காலத்தில் மாவட்ட, தாலுக்கா வாரியாக மொத்த இலஞ்ச பரிவர்த்தனை இவ்விணையத்தில் வெளியிடப்படும்.